02nd January 2019 19:44:51 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு திறமைகளை கொண்ட இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை அறிமுகம் படுத்தும் கண்காட்சி நிகழ்வு (30) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கதிர்காமத்தில் இடம்பெற்றது.
கதிர்காம கிரிவேகர தேவாலய பூமி வளாகத்தினுள் 130 இராணுவ ‘அங்கம்பொர’ வீரர்கள் தங்களது தற்பாதுகாப்பு திறமைகளை கண்காட்சிகள் மூலம் வெளிக்காட்டினார்கள். அச்சந்தர்ப்பத்தில் அந்த கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்ஷ , இராணுவ அங்கம்பொர விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இச் சங்கத்தின் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் ரவீந்திர ஜயசிங்க அவர்கள் இணைந்து கொண்டனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலையை பனாகொட இராணுவ முகாம் வளாகத்தினுள் இந்த பயிற்சியாளர்கள் நிறைவு செய்தனர்.
இலங்கையில் புராதன காலங்களில்’அங்கம்பொர’ தற்காப்புக் கலை சுய-தற்காப்பு சண்டை நுட்பமாக பயன்படுத்தப்பட்டன, இதில் ஜோதிடம், தியானம், மருத்துவ முறைகள், மந்திரம், மாயத்தோற்றம், வெளிநாட்டு படையெடுப்பாளர்களை எதிர்த்து நிற்கும் சக்திகளாக நடைமுறைப்படுத்தப்பட்டது. காலனித்துவ காலத்தின்போது நாட்டிலுள்ள இந்த 'அங்கம்பொர' நடைமுறையை அதன் செயல்பாட்டு அம்சத்திற்கு அஞ்சியதால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலையானது முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 2017 ஆம் ஆண்டு இராணுவ ‘அங்கம்பொர’ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது தலைமையில் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.best Running shoes | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5