யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழகாட்டுதழின் கீழ் யாழ். பாதுகாப்புப் படையினர் உடுத்துறை, கடைக்காடு பகுதியில் உள்ள மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு தமது தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி ஒரு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளனர்.
மூன்று மகள்களுடன் வாழும் விதவைத் தாயான திருமதி விஜயகாந்தன் வசந்தகுமாரிக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுக்கான நிதியுதவி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுதலுக்கமைய யாழில் வசிக்கும் நன்கொடையாளரான திரு விஷ் நடராஜா அவர்களால் வழங்கப்பட்டது. 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய வீடு செவ்வாய்க்கிழமை (27) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களால் இந்து மத சம்பிரதாய முறைகளுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிர்மாணிப்பு பணிகள் 12 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபல்யு.டி.எஸ் நயனஜீவ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 553 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கு மிகவும் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் 12 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் தளபதி அவர்கள் புதிய வீட்டின் சாவியை பயனாளிகளிடம் கையளித்தார். இதேவேளை, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் குடும்பத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் உலர் உணவுப் பொதியையும் அன்பளிப்பாக வழங்கினார்.மேலும், குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அருகில் உள்ள பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் கல்வி உபகரணங்களும், படிப்பிற்கான ஊக்கத்தொகையாக தேவையான வாசிப்பு மற்றும் பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டன.
55 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, யாழ்ப். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி அதிகாரி , பிரிகேட் தளபதிகள், வெற்றிலைக்கேணி கடற்படை கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் மற்றும் படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.