Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2024 18:28:21 Hours

இராணுவ மகளீர் படையணி படைத்தளபதி 1 வது இராணுவ மகளீர் படையணிக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ மகளீர் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) 1 வது இராணுவ மகளீர் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.

வருகை தந்த தளபதியை இராணுவ மரபுகளின்படி கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்று படையணியின் செயல்பாடுகளை அவருக்கு விளக்கினார்.

பின்னர், வளாகத்தில் தளபதி படையினருக்கு உரையாற்றினார். இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.