Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2021 13:51:23 Hours

இராணுவ பயிற்சி கட்டளைகள் அனைத்து இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் படையணி தலைமையகங்களுக்கு இராணுவக் கோட்பாடு குறித்து விரிவுரை

இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகம் அதன் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து படைத் தலைமையகங்கள் மற்றும் படையணி தலைமையகங்களுக்கு இராணுவக் கோட்பாடு குறித்த தொடர் விரிவுரைகளை நடத்தியது.

இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளுக்கு குறித்த விடயத்தில் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இவ் விரிவுரைகளை பயிற்சிக் கட்டளைகளின் கர்ணல் மூலோபாயம் மற்றும் கோட்பாடுகள் லெப்டினன்ட் கேணல் DLU டி தப்ரு( இலங்கை இலேசாயுத காலாட்படை) நிகழ்த்தினார். இவ்விரிவுரைகளில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய பாதுகாப்பு படைத் தலைமையகங்களும் பட்டலந்த அதிகாரிகள் தொழில் வாண்மை அபிவிருத்தி நிலையம், திருகோணமலை இராணுவ வழங்கல் பயிற்சிநிலையம் ,கவச வாகன படையணி, புலனாய்வுப் படையணி, பொது சேலைப் படையணி ,இலேசாயுத காலாட் படையணி, பொறியியல் படையணி மற்றும் விஜயபாகு படையணி ஆகியனவும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த விரிவுரைகளில் பங்குபற்றினர்.

மேஜர் ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் கர்ணல்கள் உட்பட அனைத்து அதிகாரி நிலைகளையும் உள்ளடக்கிய 1119 அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர், அங்கு குறிப்பிட்ட விடயத்தில் விரிவுரைகள் / பட்டறைகளை நடத்தியமையை அவர்கள் பாராட்டினர். எதிர்காலத்தில் படையணி பயிற்சி நாட்களுடன் ஒருங்கிணைந்து, இலங்கை இராணுவத்தின் மீதமுள்ள படையணிகளுக்கும் விரிவுரை தொடரவுள்ளது.