25th October 2024 14:42:02 Hours
இராணுவ படையணிகளுக்கு இடையிலான உடற்கட்டமைப்பு, பளுதூக்குதல் மற்றும் பவர்லிப்டிங் போட்டிகள் – 2024 பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் 2024 ஒக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெற்றது.
இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ உடற்கட்டமைப்பு, பளுதூக்குதல் மற்றும் பவர் லிப்டிங் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
உடற்கட்டமைப்பு, பளுதூக்குதல், பவர் லிப்டிங் ஆகிய போட்டி பிரிவுகளில் இடம்பெற்ற இப்போட்டியில், 17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 140 வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
பரபரப்பான தொடர் போட்டிகளின் பின்னர், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் ஆடவர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெற்றியைப் பெற்றது, அதே நேரத்தில் இலங்கை பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பெண்கள் அணி வெற்றிபெற்றதுடன், இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
பவர்லிப்டிங் போட்டியில், இலங்கை சிங்க படையணி சாம்பியன்ஷிப்பை தனதாக்கி கொண்டது. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சமிஞ்சை படையணி வெற்றி பெற்றதுடன், கெமுனு ஹேவா படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றன.
நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.