25th October 2024 15:16:44 Hours
இராணுவத்தினருக்கிடையிலான செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஒக்டோபர் 25 ஆம் திகதி பனாகொடவிலுள்ள இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் நிறைவடைந்தது. 14 படையணிகளை சேர்ந்த வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக மூன்று போட்டிகளில் பங்கேற்று தங்களது சிறப்பான திறன்களை வெளிப்படுத்தினர்.
காலாட் பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சதுரங்கக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி. வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பித்தார்.
இப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ மருத்துவப் படையணி பெற்றுக்கொண்டதுடன் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி இரண்டாம் இடத்தினை பெற்றது.
தொடர்ச்சியாகப் போட்டியிட்ட போட்டிகளைத் தொடர்ந்து, ஆடவர் திறந்த பிரிவில் இலங்கை இராணுவ மருத்துவ படையணி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணிஇரண்டாம் இடத்தைப் பெற்றது. மகளிர் திறந்த பிரிவில் இலங்கை பொறியியல் படையணி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் இலங்கை இராணுவ மருத்துவ படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
பரபரப்பாக நடைப்பெற்ற இறுதிபோட்டிகளை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ சதுரங்கக் குழுவின் உப தலைவர் கேணல் எம்.எம்.எம்.பீ. மஹேஷ் குமார, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கண்டுகளித்துடன் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:
தனி நபர்:
-முதலாமிடம்: கோப்ரல் டீ.ஏ.டீ. மதுஷங்க, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி
-இரண்டாமிடம்: இரண்டாம் லெப்டினன் ஆர்டிஏஎம் சுரவீர, இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி
-மூன்றாமிடம்: மேஜர் ஏஏபிடிபீ அபேவர்தன இலங்கை கவச வாகன படையணி
பெண்கள் பிரிவு
-முதலாமிடம்: கேப்டன் எம்பீஎஸ் பெல்பிடிய, இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி
-இரண்டாமிடம்: சிப்பாய் ஜீடீசி சமரசிங்க இலங்கை பொறியியல் படையணி
-மூன்றாமிடம்: சிப்பாய் ஆர்ஏடப்ளியூஎஸ் ரணசிங்க இலங்கை பொறியியல் படையணி
ஆண்கள் பிளிட்ஸ்:
-முதலாமிடம்: மேஜர் ஏஏபிடிபீ அபேவர்தன இலங்கை கவச வாகன படையணி
-இரண்டாமிடம்: கேப்டன் டிஎஸ்ஐ சிரிவர்தன இலங்கை பொறியியல் படையணி
-மூன்றாமிடம்: பணிநிலை சார்ஜன் எச்கேஜீ சம்பத் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
பெண்கள் பிளிட்ஸ்:
-முதலாமிடம்: சிப்பாய் ஜீடீசி சமரசிங்க இலங்கை பொறியியல் படையணி
-இரண்டாமிடம்: கேப்டன் எம்பீஎஸ் பெல்பிடிய, இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி
-மூன்றாமிடம்: கோப்ரல் டப்ளியூபீசி பன்சரா இலங்கை இராணுவ மருத்துவப் படையணி
ஆண்கள் அணி
1. இலங்கை இராணுவ மருத்துவப் படையணி
2. இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி
3. இலங்கை கவச வாகன படையணி
பெண்கள் அணி
1. இலங்கை பொறியியல் படையணி
2. இலங்கை இராணுவ மருத்துவப் படையணி
3. இலங்கை சமிக்ஞை படையணி
அனைத்திலும் சிறந்த படையணி
1. இலங்கை இராணுவ மருத்துவப் படையணி
2. இலங்கை பொறியியல் படையணி
3. இலங்கை கவச வாகன படையணி