Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2022 20:48:09 Hours

இராணுவ தளபதி பனாகொடை இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பனாகொடை இராணுவ வளாகம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு முல்லேரிய சூரியகாந்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார். வருகை தந்த இராணுவத் தளபதி அந்த இடங்களில் கடமையாற்றும் இராணுவ வீரர்களை சந்தித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.பின்னர் இராணுவ வீரர்களுக்கு தினசரி உணவு சமைக்கும் சமையலறையினையும் பெண் இராணுவ சிப்பாய்களுக்கு உணவு வழங்கும் உணவகங்களையும் பார்வையிட்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் முதலில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகேவுடன் இணைந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிர்வகிக்கும் சூரியகாந்தி கிராமத்திற்கு விஜயம் செய்து அதன் பன்முக செயற்பாடுகளை பார்வையிட்டார். சூரியகாந்தி கிராமம், ஒரு நிலையான சமூக கிராமத்தின் புதிய மாதிரியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு வகையான நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, இதில் 'யோகர்ட்' உற்பத்தி பிரிவு, நாற்று மேடை மற்றும் பயிர் விவசாயம் போன்றவை அடங்கும், அவற்றில் பெரும்பாலானவை இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படுகின்றன. அடுத்து, இராணுவத் தளபதி பனாகொடை இராணுவ வளாகத்திற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகேயுடன் தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே, இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் நிலைய தளபதி கேணல் சசங்க பெரேரா மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களை அவதானித்ததோடு, உணவு வகைகளின் தரம் மற்றும் கலோரிகளின் உள்ளடக்கம் போன்றவற்றை கேட்டறிந்து சமையற்காரர்கள் மற்றும் ஏனைய வீரர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். கீழ் மட்ட கருத்துக்களைப் பெறும் நோக்கில், உணவகத்தில் மதிய உணவு நேரத்தின் போது, இராணுவப் பெண் சிப்பாய்களின் ஒரு பிரிவினருடனும் தளபதி உரையடினார்.

இந்த திடீர் விஜயத்தின் போது, இராணுவத் தளபதி படையினரின் விடுதி பகுதிக்கும் விஜயம் செய்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகத்தின் படையினரின் உணவத்திற்க்கு சென்று நேரில் பார்வையிட்டர். அவர்களுடன் கலந்திரையாடி உணவின் தரம் மற்றும் பிற விடயங்கள் குறித்து விசாரித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே, இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி நிலைய தளபதி கேணல் சசங்க பெபேரா மற்றும் இராணுவத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பனாகொடை இராணுவ வளாகத்திற்கான இராணுவத் தளபதியின் விஜயத்தில் இணைந்துகொண்டனர்.