Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th April 2019 13:49:15 Hours

இராணுவ செயலாளராக மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா பதவியேற்பு

இலங்கை இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராக மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி பதவியை பொறுப்பேற்றார்.

சம்பிரதாய முறைப்படி சுப வேளையில் மங்கள விளக்கேற்றி உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன்பு மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்தார்.முன்னாள் இராணுவ செயலாளராக கடமை வகித்த மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் இராணுவ சேவையிலிருந்து 30 வருட காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் நிமித்தம் இவர் புதிய இராணுவ செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்கள் இராணுவ சேவையில் 34 வருடங்களை நிறைவு செய்து கட்டளை தளபதி, பதவி நிலை அதிகாரி பதவிகளை வகித்துள்ளார்.

இவர் 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடெற் அதிகாரியாக இணைந்து இராணுவ பீரங்கிப் படையணியில் 2 ஆம் தர லெப்டினனாக இணைந்துள்ளார்.மேலும் கட்டளை அதிகாரி, பீரங்கிப் பயிற்சி பாடசாலை, பீரங்கி பிரிக்கட் தலைமையகம், 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, இராணுவ தலைமையக திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளராகவும், 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | NIKE RUNNING SALE