Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2024 12:47:14 Hours

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 11 வது காலாட் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவு விழா

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 பெப்ரவரி 15 - 16 ஆம் திகதிகளில் மத ஆசிர்வாதம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 11 வது காலாட் படைப்பிரிவு அதன் 14 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.

ஆண்டு நிறைவு விழா நாளில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பணிநிலை அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். பின்னர் காலாட் படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

பின்னர், 14 வது ஆண்டு நிறைவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களின் உணவகத்தை காலாட் படைப்பிரிவின் தளபதி திறந்து வைத்தார்.

இறுதியாக காலாட் படைப்பிரிவின் தளபதி அனைத்து நிலையினருக்குமான மதிய உணவில் கலந்து கொண்டதுடன், அங்கு தளபதி படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடினார்.