Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2018 18:58:50 Hours

இராணுவ உதவியுடன் புதிய வீடு நிர்மானிப்பு

‘ஜயக்ரானய’ நிறுவனத்தின் டொக்டர் அநுல விஜயசுந்தர அவர்களது அனுசரனையில் பொகவஸ்வெவயில் வசித்து வரும் விதவைப் பெண்ணான திருமதி பி. ஆர். என்.கே மெனிக்கே மற்றும் அவரது 12 வயதான மகன் வசிப்பதற்காக அவர்களுக்கு 600,000 ரூபாய் மதிப்புள்ள வீடொன்று கட்டி இராணுவத்தினரது உதவியுடன் வழங்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொறிமுறை காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி, 56 ஆவது படைப் பிரவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது ஒத்துழைப்புடன் 563 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினரது ஒத்துழைப்புடன் இந்த வீடு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய , வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலால், 563 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் உபாலி குணசேகர, பேராசிரியர்களான ரணில் பெர்ணான்டோ மற்றும் அஸ்வினி பெர்ணாண்டோ, டொக்டர் அதுல விஜயசுந்தர அவர்கள் கலந்து கொண்டனர். bridge media | Nike Air Max 270