13th February 2024 13:44:23 Hours
இராணுவ உடற்பயிற்சிப் பாடசாலை அதன் 41 வது ஆண்டு நிறைவு விழாவை போதி பூஜை மற்றும் தொடர் நிகழ்ச்சிகளுடன் 2024 ஜனவரி 31 ஆம் திகதி கொண்டாடியது.
ஆண்டு நிறைவு விழா நாளில் (பெப்ரவரி 01), இராணுவ உடற்பயிற்சிப் பாடசாலையின் படையினர் வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சியை நடாத்தினர். பின்னர், இராணுவ உடற்பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் பிகேஎஸ்எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ அவர்கள் படையினருக்கு உரையாற்றினார், அதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் படையினர் ‘செனெஹச’ முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.