Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2024 21:42:24 Hours

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

பிரிகேடியர் டீ.டீ.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஎஸ்சி 29 நவம்பர் 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

வருகைதந்த சிரேஷ்ட அதிகாரியை இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக பிரதிப் பணிப்பாளர் அன்புடன் வரவேற்றதுடன் இராணுவ நடனக் குழுவினர் அவரை அவரது புதிய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, பணிப்பாளர் அலுவலகத்தில் அவரது புதிய நியமனத்திற்கான ஆசிர்வாதம் வழங்க மத சடங்கு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய பணிப்பாளர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு படையினருக்கான உரையுடன் நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.