Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2018 08:20:29 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு ஆங்கில பயிற்சி நெறிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் கிளிநொச்சி பிரதேசத்தில் கடமையாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஆங்கில பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சிகள் கிளிநொச்சி பயண்பாட்டு வளாக பகுதியில் வெள்ளிக் கிழமை (17) ஆம் திகதி இடம்பெற்றன. பயிற்சிகள் நான்கு கட்டங்களாக இடம்பெற்றன.

முதல் கட்ட பயிற்சியில் 14 இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர். இந்த ஆங்கில பயிற்சிகள் கிளிநொச்சியில் உள்ள ஆங்கில உபதேசகரான திருமதி மனோரஞ்சனி அவர்களால் நடாத்தப்பட்டன.

இந்த பயிற்சி நிறைவு நிகழ்வு செவ்வாய்க் கிழமை (21) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்கள் வருகை தந்தார். jordan release date | Nike Shoes