Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st February 2024 18:55:10 Hours

இராணுவப் புலனாய்வு படையணியின் 31வது ஆண்டு நிறைவு விழா

இராணுவப் புலனாய்வு படையணி தனது 31வது ஆண்டு நிறைவை ஜனவரி 25 ம் திகதியன்று கரந்தெனிய இராணுவப் புலனாய்வு படையணி தலைமையகத்தில் இராணுவப் புலனாய்வு படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களின் தலைமையில் கொண்டாடியது.

இந்நிகழ்வில் அணிவகுப்பு மரியாதை, மரம் நடுகை, புதிய அதிகாரிகளின் உணவக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுதல், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட படையினர் விடுதிக் கட்டிடம் திறப்பு, போர்வீரர்கள் நினைவேந்தல் மற்றும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் புலனாய்வு படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.