Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவப் படையினரால் மருத்துவ நடமாடும் சேவை

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62ஆவது படைப் பிரிவின் 14ஆவது காலாட் படையணியின் தலைமையில் 621ஆவது படையினர் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் பங்களிப்போடு வெலிஓயாப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கான மருத்துவ நடமாடும் சேவையானது கடந்த சனிக் கிழமை (14) கஜபபுர பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நடமாடும் சேவையில் கஜபாபுர,மெனராவெவ,மாயவெவ,எதவெடுநாவெவ ,நிக்காவெவ,ஜனாகபுர ,கிரிம்பன்வெவ ,கல்யாணிபுர ,சபுமல்தேன ,சம்பத்துவெர ,நாமல்புர மற்றும் பராக்கிரபுர போன்ற பிரதேசங்களை உள்ளடங்க்கிய 1086 பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இராணுவ சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, 62ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எல் ஏ என் எஸ் வனிகசிங்க மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் தலைவர் அவர்களின் உதவியோடு முப்படையினரின் பங்களிப்போடு இந் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லுhரியை முன்னிலைப் படுத்தி 11 விசேட வைத்திய நிபுணர்கள் , 24 வைத்தியர்கள் மற்றும் 95 வைத்திய உதவியாளர்கள் , 62 ,621 போன்ற படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

Best Sneakers | Air Jordan