02nd February 2024 15:51:40 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை வியாழக்கிழமை (பெப்ரவரி 01 ) அன்று வழங்கியது.
இத் திட்டத்தின் நோக்கம், படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதாகும்.
திருமதி ஜானகி லியனகே அவர்கள் நிவாரணப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவு பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.