Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2021 08:10:53 Hours

இராணுவத்தின் சிவில் விவகார அதிகாரிகளின் செயற்பாடுகளில் சிறந்த வெளிபாடு

இலங்கை இராணுவத்தின் சிவில் விவகார அதிகாரிகளுக்கான நான்கு நாள் பயிற்சி பட்டறை (ஏப்ரல் 20-23) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான 2020-2025 ஆண்டுகளுக்கான முன்னோக்கு மூலோபாய திட்டம் உள்ளடங்களாக சிவில் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான சகல அம்சங்களும் உள்ளடக்கியதாக பயிற்சி பட்டறை அமைந்திருந்தது.

இராணுவ தலைமையகத்தின் உளவியல் பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த பயிற்சி பட்டறையில் நாட்டின் பல்வேறு படைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 49 சிவில் விவகார அதிகாரிகள் பங்குபற்றியதுடன் சிறந்த விரிவுரையாளர்கள் பங்கேற்று விரிவுரைகளை நிகழ்த்தினர்.

கத்தோலிக்க/ கிறிஸ்த விவகாரம் தொடர்பாக 64 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரட்ன, நடைமுறை தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் உளவியல் செயல்பாடுகள் பிரிகேடியர் அநுருத்த செனவிரத்ன, இலங்கை இராணுவ சிவில் விவகாரங்கள் தொடர்பான அடுத்த 5 ஆண்டுகளுக்கான முன்னோக்கிய மூலோபாயம் மற்றும் நடைமுறை செயல்பாடுகள் தொடர்பான கேணல் அதுல கொடிபிலி, சிவில் விவகார அலுவலரின் பொறுப்புகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக கேணல் பிஎம்ஆர்ஜே பண்டார, நாட்டின் பாதுகாப்பு முறைமைகள் தொடர்பில் லெப்டினன் கேணல் கே.ஜே.ரணவீர, இலங்கை சமூக மற்றும் கலாச்சார பிரச்சினைகள்தொடர்பாக கலாநிதி சிங்கராஜ தம்மிட்ட தெல்கொட , ஹிந்து கலாசாரம் தொடர்பாக கேணல் பிஜிஎஸ் சமந்தி,பௌத்த கலாசாரம் மேஜர் டிபிஜீகேபி அல்விஸ், இஸ்லாமிய கலாசாரம் தொடர்பாக அஷேக் அமீர் ஹகமதீன் மௌலவி, இலங்கை நிர்வாக பொறிமுறை தொடர்பாக திருமதி சதுராதி வீரசிங்க ஆகியோரால் மேற்படி விடயங்கள் தொடர்பிர்பிலான விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

மேற்படி பயிற்சி பட்டறையிள் நிறைவு விழா வௌ்ளிக்கிழமை (23) நடைபெற்றது.