Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 12:56:50 Hours

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு விரிவுரைகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் இறுதி நாள் நிகழ்வு (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

இந்த பயிற்சிகளில் 59, 68, 64 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையணியினர் பங்கேற்றி கொண்டனர். இந்த பயிற்சிகளை கடலில் விஷேட படையணிகளினால் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சிகள் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 100 படை வீர ர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

மேலும் பயிற்சிகளை நிறைவு செய்த படையினருக்கு 64 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி அவர்களினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன. jordan release date | Asics Onitsuka Tiger