23rd September 2018 15:45:31 Hours
இராணுவத்தின் எதிர்கால கல்வி திட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலமர்வு 24 ஆவது படைப் பிரிவில் (19) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் 'தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை உருவாக்குவதற்கான இராணுவப் படையினரின் பங்களிப்பு', 'விபத்துக்கள் மற்றும் தற்கொலைகளில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டிய இராணுவப் பங்கு', 'போதைப் பழக்கத்தை தடுப்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக் காட்டலின் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
இந்த செயலமர்வுகளில் அம்பாறை மஹஓயா 11 உதவி பொலிஸ் அத்தியட்சகர் லூஷியன் சூரியபண்டார, அம்பாறை தள வைத்தியசாலையின் உலவியாளர் டொக்டர் சிரந்தி விஜயசுந்தர அம்பாறை தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் எம்.எம்.எம்.ஜி.பீ.எம் ரஷாட் மற்றும் 112 படைத் தளபதி பிரிகேடியர் எம்.டப்ள்யூ.ஏ.ஏ விஜயசூரிய அவர்கள் இணைந்திருந்தனர்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் இந்த செயலமர்வில் பங்கேற்றுக் கொண்டனர்.Asics footwear | Nike Shoes