Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2019 18:43:48 Hours

இராணுவத்தினரின் பங்களிப்புடன் கடற்கரை சிரமதான பணிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் 241ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரின் படையினரால் (07) ஆம் திகதி புதன் கிழமை அக்கரைபற்று பிரதேசத்தில் உள்ள சின்னமுகத்துவாரம் கடலோரப் பகுதிகளில் சிரமதானி பணிகளை மேற் கொண்டதுடன் அதன் கழிவு பொருட்களையும் அகற்றினர்.

இப் பணிகள் 241ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் டபிள்யூ.பி.ஜே. விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் யு.எல்.சி ஜயசேன மற்றும் மேஜர் ஜி.ஆர்.ஏ. புன்னசிரி அவர்களின் மேற்பார்வையில், படையினர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைபற்று பிரதேசத்தில் இருந்து 450 க்கு அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் 241 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், அலயவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், அக்கரைப்பற்று நகராட்சி மன்றம், அலயவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை, அம்பாறை மாவட்ட கடலோர பாதுகாப்புத் துறையின் பொறியியலாளர் திரு கே.எம்.ரிபாஸ் மற்றும் கோலவில் விளையாட்டு கழகத்தின் திரு சமன் ராஜபக்ஷ உட்பட பல முக்கிய சமூகத் தலைவர்களும் இணைந்து கொண்டனர். Sportswear free shipping | Nike, adidas, Converse & More