01st February 2024 18:51:29 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் புதன்கிழமை (ஜனவரி 31) வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஸ்வீ யூஎஸ்பீ அவர்களினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். சுமுகமான உரையாடலின் போது, பாதுகாப்பு, சமூக மேம்பாடு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் பங்கு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் நிறைவில் வருகை தந்த உதவி பாதுகாப்பு ஆலோசகர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் வாழ்த்துக் குறிப்புகளை எழுதினார். பின்னர், நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் சுமுகமான சந்திப்பு இனிதே நிறைவுற்றது.