07th October 2018 21:24:42 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களது ஏற்பாட்டில் இராணுவத்திலுள்ள கெளிப்ஷோ இசைக் கலைஞர்கள் மற்றும் நாடக திறமையுள்ளவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் கிளிநொச்சியில் இடம்பெற்றன.
இதன் போது 24 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கெளிப்ஷோ இசைக் குழுவினர் சிறந்த கெளிப்ஷோ இசைக் குழுவினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சமூகப் பிரச்சினைகள், போதைப் பொருள் மற்றும் மது போதைப் பழக்கங்கள், சாலை விபத்துக்கள், சமூக ஊடகங்கள் மற்றும் அதன் விளைவுகள் முதலியவற்றை உள்ளடக்கி 66 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் படையணிகள் இந்த நாடகங்களை முன்வைத்தனர்.Nike Sneakers Store | Nike