21st November 2022 10:12:30 Hours
திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையில் பதவி நிலை பாடநெறி இல – 08 இன் மாணவர் அதிகாரிகள் இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி தலைமையிலான குழுவினர் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரிக்கு கடந்த 2022 நவம்பர் 05 ம் திகதி அறிமுக விஜயத்தை மேற்கொண்டனர்.
சகோதார சேவைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு நிர்வாக அமைப்புகளின் அனுபவத்தை பயிற்சியாளர்களுக்கு வழங்கும் முதன்மை நோக்கத்துடன், நிர்வாக பதவி நிலை பாடநெறியின் ஒரு பகுதியாக இவ் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்படை வழங்கல் துறையில் மாணவ அதிகாரிகளின் ஒப்பீட்டு அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இவ் விஜயம் வழங்கியுள்ளது.
இராணுவ வழங்கல் பாடசாலையின் குழுவிக்கு கல்வியற் கல்லூரியின் வரலாறு மற்றும் வகிபங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் முன் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டனர். இவ் விஜயத்தின் போது, இலங்கை கடற்படையின் இரண்டாவது பெரிய நிர்வாக வலையமைப்பாக கருதப்படும் கொமடோர் கண்காணிப்பாளர் நிர்வாக திணைக்களத்திற்கு வழங்கல் பாடசாலை பதவி நிலை பாடநெறி மாணவ அதிகாரிகள் விஜயம் செய்தனர்.
நிகழ்வின் முக்கிய அங்கமாக, குறிப்பிடத்தக்க கடலோரக் பாதுகாப்பு கடற்படைக் கப்பல்களில் ஒன்றான 'சயுரா'வைப் பார்வையிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் கப்பலின் செயல்பாடு மற்றும் இயக்க முறைமைகள் மற்றும் கடலில் கப்பல் பயன்படுத்தும் நிர்வாக அமைப்பு தொடர்பாகவும் விளக்கத்தைப் பெற்றனர்.
பின்னர், இக் குழுவினர் வளாகத்தில் உள்ள கடற்படைக் களஞ்சியங்களுக்குச் சென்று, அங்கு கொள்முதல் முகாமை, களஞ்சிய முகாமை, பொருள் முகாமை, கடற்படை நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் வழங்கல் நடைமுறைகள் குறித்த ஏராளமான தகவல்கள் தொடர்பாக சுருக்கமான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் மேனக பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட பதவி நிலை பாடநெறியின் இணைப்பாளர் கெப்டன் துவன் மார்சோ ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.