19th November 2022 21:13:53 Hours
குருவிட்ட கெமுனு ஹேவா படையணி நிலையத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி மற்றும் மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன ஆகியோருக்கான கொரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (12) நடைபெற்றது.
அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிமித்தம் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சந்திம லமாஹேவா ஆகியோரின் வழிக்காட்டலுக்கமைய இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற இரண்டு நட்சத்திர ஜெனரல்களை, கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மற்றும் அனைத்து படையினர்களின் சார்பாக, நிலைய கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்ன அன்புடன் வரவேற்றார். பின்னர் இராணுவ சம்பிரதாய முறைகளுடன் அவர்களுக்கு பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன. பின்னர் கெமுனு ஹேவா படையணியின் உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர், புதிய மேஜர் ஜெனரல்கள் இருவராலும் வரவேற்பைக் குறிக்கும் வகையில் அனைத்து நிலை தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. மேஜர் ஜெனரல் சந்திம லமாஹேவா அவர்களினால் அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டும் வகையில் அதிகாரிகளின் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சகல நிலையினருக்கான மதிய உணவு விருந்தில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டது.
படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விழாவில் கலந்துகொண்டனர்.