Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2022 21:12:53 Hours

பொறியியல் படைப்பிரிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு

இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு வௌ்ளிக்கிழமையன்று (18) பெருமையுடன் இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களின் பங்குபற்றுதலுடன் தொடர் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.

இத் தினத்தினை முன்னிட்டு 2022 நவம்பர் 16-17 திகதிகளில் மத்தேகொட 'ஹோம் ஒப் சப்பர்ஸ்' என்ற இடத்தில் இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம், அன்னதானம் மற்றும் மத அனுஷ்டானங்கள் இடம் பெற்றன. பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் மேளம் கலைஞர்கள் நிறைந்த ஒரு வண்ணமயமான ஊர்வலம், புனித நினைவுப் பேழையுடன் (கரண்டுவ), பழைய நூல்களின் தொகுப்புடன் (பிரிவாண போத) பொறியியல் படைப்பிரிவின் காயமடைந்த, உயிர்நீத்த, மற்றும் சேவையில் உள்ள அனைத்து போர்வீரர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக மகா சங்க உறுப்பினர்கள் ன்பு எண்கோண மண்டபத்திற்கு (பிரித் மண்டபய) அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆண்டு நிறைவு நாளில் (18), படைப்பிரிவு தளபதி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மத்தேகொட அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை அளித்து கௌரவிக்கப்படார். தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துபசாரத்திற்கு முன்னர் படைப்பிரிவு தளபதி படையினருக்கு உரையாற்றினார். இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பொறியியல் படைப்பிரிவின் சிப்பாய்கள் இவ் ஆண்டு நிறைவு நிகழ்வு தொடரில் பங்குபற்றினர்.