Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2022 21:14:08 Hours

231 வது காலாட் பிரிகேட்டின் 11 வது ஆண்டுவிழா

கல்லடி 231 வது காலாட் பிரிகேட் தலைமையகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) தனது 11 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது.

231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களை இராணுவ மரபுகளுக்கு அமைவாக படையினர் அன்புடன் வரவேற்றனர். ஆண்டு நிறைவு நாளில் (11) நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளித்து கௌரவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து மரக்கன்று நட்டல், பணிநிலை அதிகாரிகள் மற்றும் படையினருடன் குழுப்படம் எடுத்தல் என்பவற்றில் கலந்துகொண்டார்.

பின்னர், பிரிகேடியர் திலுப பண்டார படையினருக்கு உரையாற்றுகளில் ஒழுக்கத்தின் உயர் தரத்தைப் பேணுவதுடன், தமது அர்ப்பணிப்பான பாத்திரங்களைத் தொடருமாறு அனைவருக்கும் கோரிக்கைவிடுத்தார்.

அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்துடன் ஆண்டு நிறைவு நிகழ்வு நிறைவுற்றது.