Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2022 18:56:02 Hours

யாழ். 4 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி படையினர் யாழ் இரத்த வங்கியின் கோரிக்கையினை நிறைவேற்றல்

4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படையினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு தேவையான இரத்த களஞ்சியத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக உடனடியாக செயற்பட்டு செவ்வாய்க்கிழமை (15) அன்று 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி வளாகத்தில் இரத்த மாற்று அலகு வைத்திய ஊழியர்களின் உதவியுடன் இரத்தானம் வழங்கினர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.

4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் ஏ. ஏ. சி. சி. குமாரவின் மேற்பார்வையின் கீழ் 56 படையினர் சுயமாக முன்வந்து வைத்தியசாலைக்கு இரத்த தானத்தினை வழங்கினர். கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி பிரிகேடியர் கிளிபோர்ட் சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.