16th November 2022 16:00:25 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பதவி-ஸ்ரீபுராவில் உள்ள 62 வது காலாட் படைப்பிரிவுத் தலைமையகத்தின் புதிய படைப்பிரிவு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க அவர்களை மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (13) பதவியேற்றார்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க நுழைவாயிலில் 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை படையினரின் பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பிரிகேட் தளபதிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் வருகை தந்த தளபதி அவர்களை வரவேற்றனர்
பின்னர், மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்றைய தினத்தின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கும் அனைத்து படையினருக்கும் சம்பிரதாயமாக உரையாற்றுவதற்கும் புதிய தளபதி அழைக்கப்பட்டார். அனைத்துதரப்பினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் மூலம் அன்றைய நிகழ்ச்சிகள் உச்சக்கட்டத்தை எட்டியது.
621, 622 மற்றும் 623 வது காலாட் பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தற்போது கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களுக்கு பின்னர் அவர் பதவியேற்றுள்ளார்.