Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2022 14:45:43 Hours

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் யாழ். தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் வியாழக்கிழமை (3) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் அலுவலகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி கேணல் அசித்த புஷ்பகுமார அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இச்சந்திப்பில், பாதுகாப்பு, சமூக மேம்பாடு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன், யாழ்.பாதுகாப்புப் படைகளின் பணிகள் குறித்து தமது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இச்சந்திப்பின் முடிவில், வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகர் வரவேற்பாளர்கள் புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.

பின்னர்,இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு, சுமுகமான சந்திப்பு முடிவுக்கு வந்தது.