06th November 2022 14:30:43 Hours
இலங்கை பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் உள்ள வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக வெள்ளிக்கிழமை (4) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சுருக்கமான சமய அனுஷ்டானங்களுக்குப் பிறகு உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
பிரிகேடியர் ரசிக குமார அவர்களுக்கு பதிலாகவே இந்த பதவிக்கு பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்கள் பதவியேற்றுள்ளார்.இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.