Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2022 18:51:03 Hours

நிலை உயர்வு பெற்ற இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து

இலங்கை பீரங்கி படையணியில் மேஜர் ஜெனரலாக புதிதாக நிலை உயர்வு பெற்ற இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (01) பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி படையணியில் இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் மற்றும் மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க ஆகிய இரு நட்சத்திர ஜெனரல்களுக்கு அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்பு வழங்கி கௌரவிக்கப்படுவதற்கு முன்னர் தனித்தனியாக படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது.

இலங்கை பீரங்கிப் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, அதிகாரிகள் மற்றும் படையணியை சேர்ந்த சிப்பாய்களுடன் இணைந்து இரு சிரேஷ்ட அதிகாரிகளையும் வாழ்த்தினர்.

குழு புகைப்படங்கள் மற்றும் அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துடன் அன்றைய நிகழ்வு முடிவுக்கு வந்தது.