02nd November 2022 21:04:49 Hours
இப் போட்டியானது இலங்கை சிங்க படையணியின் கிரிக்கெட் அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நோக்கத்தில் இலங்கை சிங்க படையணியின் பல்வேறு படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 17 அணிகள் போட்டியில் பங்குபற்றினர்.
இப் போட்டியில் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கிரிக்கெட் அணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், 6 வது இலங்கை சிங்க படையணி இரண்டாம் இடத்தை பெற்று கொண்டது.
இப் போட்டியில் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டிகளை நேரில் பார்வையிட்டு பரிசுகளையும் வழங்கினார்.
இந் நிகழ்வில் இலங்கை சிங்க படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமாலை, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.