15th November 2022 23:02:44 Hours
25 அக்டோபர் 2022 அல்லது அதற்கு முன்னர் விடுமுறை அனுமதி இல்லாமல் இருக்கும் அனைத்து முப்படை உறுப்பினர்களுக்கும் 15 நவம்பர் 2022 முதல் பாதுகாப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின் கீழ் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றத்தைப் பெறலாம் என்று பாதுகாப்பு அமைச்சக ஊடக வெளியீடு தெரிவித்துள்ளது.
பொது மன்னிப்புக் காலம் 2022 டிசம்பர் 31, அன்று நிறைவடைவதுடன் வெளியேறுபவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருக்குமானால் அவற்றை செலுத்த வேண்டும். பொது மன்னிப்பு காலம் 15 நவம்பர் 2022 முதல் 2022 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்று அந்த வெளியீடு மேலும் கூறிப்பிடுகிறது. (முற்றும்)