Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2022 16:20:35 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகளுக்கு 'வன்முறை தீவிரவாதம்' பற்றிய கற்கை

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 70 அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற 'வன்முறை தீவிரவாதம் மற்றும் புதிய போக்குகள்' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பீடத்தின் மூலோபாய கற்கைகள் திணைக்களத்தின் விரிவுரையாளர் திருமதி சிந்துஜா ஜயரத்ன அவர்களால் நடத்தப்பட்ட விரிவுரை அமர்வுகளில் "தீவிரவாதத்திற்கான அறிமுகம்", "வெவ்வேறு பயங்கரவாத தந்திரோபாயங்கள்", "ஜிஹாதிஸ்ட்"”, அல் கொய்தா மற்றும் அதன் உலகளாவிய மற்றும் பிராந்திய தாக்கம்”, “ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அதன் உலகளாவிய மற்றும் பிராந்திய தாக்கம்”, “பிரசாரம் மற்றும் அதன் விளைவுகள்”, “இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய பிராந்திய பயங்கரவாத நிலப்பரப்பு”, “இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் புதிய பாதுகாப்பு பரிமாணங்கள்”, “தீவிரவாதம் மற்றும் இலங்கை மீதான அதன் தாக்கம்”, போன்ற தலைப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அமர்வின் இறுதியில் விரிவுரையாளருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.