Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2022 16:22:56 Hours

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் ஆங்கில பாடநெறி – 5 ஆம் கட்டம் ஆரம்பம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பல்வேறு படையணிகளில் பணியாற்றும் 30 பேர் கொண்ட சிப்பாய் குழுவிற்கு பயிற்சி பாடநெறி எண் - 5 சிறப்பு ஆங்கில மொழிப் பாடநெறி 2022 ஒக்டோபர் 25 ம் திகதி யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கில் உள்ள இராணுவத்தினரிடையே ஆங்கில மொழிப் திறனை மேலும் மேம்படுத்தும் நிமித்தம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் எண்ணகரு மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்தப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப் பணி கேணல் கே.ஏ.புஷ்ப குமார அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு ஆரம்ப உரையாற்றியதுடன், ஆங்கில மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தை சுற்றிக்காட்டினார். யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.