Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2022 17:45:11 Hours

நிலை உயர்வு பெற்ற இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதிக்கு பாராட்டு

மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் ஒக்டோபர் 17 ஆம் திகதி இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, நிலை உயர்வு பெற்ற தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய மரியாதை மற்றும் அன்பான வாழ்த்துக்களும் வழங்கப்பட்டன.

வருகை தந்த தளபதிக்கு இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் சிப்பாய்களால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அன்றைய தினம் இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் அனைத்து படையினர்களுக்கும் மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரிமுதலி அவர்கள் உரையாற்றியதுடன், இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கு இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் அனைத்து படையினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.