Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2022 17:30:11 Hours

இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு அடிப்படை பயிற்சி நிறைவு

இயந்திரவியல் காலாட் படையணியின் வருடாந்த பயிற்சி திட்டத்திற்கு இணங்க, பெரியகாடு இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையில் நடாத்தப்பட்ட முதலாவது ஆட்சேர்ப்பு பாடநெறி பயிற்சி வெள்ளிக்கிழமை (21) நிறைவு பெற்றது.

செப்டம்பர் 01 ஆரம்பமாகிய பாடநெறியில் இயந்திரவியல் காலாட் படையணியின் பணிகளுக்காக 110 ஆட்சேர்ப்பு பயிற்சியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் நளீன் பிரபாத் அவர்களின் அழைப்பின் பேரில் இயந்திரவியல் காலாட் படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.