Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2022 18:00:11 Hours

593 வது பிரிகேட்டினால் ஶ்ரீ சம்போதி விகாரையில் கட்டின பூஜை

கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் பிரதமகுரு வண. திஸ்ஸபுர குணரதன தேரர் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய ஒக்டோபர் 22 – 23 ஆம் திகதிகளில் படையினரின் ஒத்துழைப்புடன் ‘கட்டின பூஜை’ நிகழ்வு இடம் பெற்றது.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் டயஸ், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சுரேஷ் பெரேரா, 593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் குலதிலக, 593 வது பிரிகேடின் படையினர் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் வருடாந்த விழாவை சுமூகமாக நடத்துவதற்கு 593 வது பிரிகேடின் 19 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது (தொ) சிங்க படையணியின் படையினர் தங்களது அதிகபட்ச ஆதரவை வழங்கினர்.

நடைபெற்ற சமய நிகழ்வு ‘ஹீல் தான’ (காலை உணவு) மற்றும் அனைத்து பிக்குகளுக்கும் ‘அடபிரிகர’ தானம் வழங்குதலுடன் இறுதி கடினானிசன்ச சொற்பொழிவு ஆலய பிரதம தேரரினால் நிகழ்த்தப்பட்ட பின்னர் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன.