Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2022 17:15:11 Hours

3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணியினரால் நெல் அறுவடை

சேதனை பசளையைப் பயன்படுத்தி, கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் 3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணி படையினரால் சம்பிரதாய முறைகளுக்கு அமைய ஹிங்குராக்கொடையில் வெள்ளிக்கிழமை (21) முதலாவது நெல் அறுவடை செய்யப்பட்டது.

இத் திட்டமானது இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கமைய படையினரால் 4 மாதங்களுக்கு முன்பு இராணுவ தலைமையகத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினருடன் கலந்தாலோசித்து முகாம் வளாகத்திற்குள் சுமார் 5 ஏக்கர் நிலத்தை உழவு செய்து இவ் திட்டத்தைத் ஆரம்பித்தனர்.

3 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் டபிள்யுடிபிகே விதான அவர்கள் அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அறுவடை செய்வதற்கு முன்னர் சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.