Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2022 17:34:46 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி விஜயம்

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (14) யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான விஜயத்தின் போது அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில் ஒரு வண்ணமயமான காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது.

அதன் பின்னர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்காக உரையாற்றியதுடன், கடந்த காலங்களில் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவளித்த படையினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், பொதுமக்களின் இதயங்களையும் மனதையும் வெல்வதன் மூலம் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த படையினர் மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அதேபோன்று, அண்மையில் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதிக்கு அவரது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அதே ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி படையினரிடம் வலியுறுத்தினார்.

உரையின் நிறைவில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள், சகல தரப்புகளின் சார்பாகவும், அன்றைய பிரதம அதிதிக்கு அடையாள நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், படையினரை சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்ததை பாராட்டினார்.

பின்னர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி அந்தந்த சிரேஷ்ட அதிகாரிகள், யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த ஏற்பாட்டில் அனைத்து தளபதிகள், பிரிகேட் தளபதிகள்,கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இணைந்திருந்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த சில மணி நேரங்களின் பின்னர், கிளிநொச்சி செல்லும் வழியில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் முறையான விஜயத்தினையும் மேற்கொண்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் வருகை தந்த தளபதியை வரவேற்றதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாயமான காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன், அண்மைக்காலத்தில் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவளித்த படையினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், பொதுமக்களின் இதயங்களையும் மனதையும் வெல்வதன் மூலம் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த படையினர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

உரையின் இறுதியில், அனைத்து தரப்புகளின் சார்பாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் அன்றைய பிரதம அதிதிக்கு அடையாள நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.