Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2022 20:24:25 Hours

221 வது பிரிகேட் படையினரால் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு பாடசாலை பொருட்கள் வழங்கள்

ஜேர்மனியை தளமாகக் கொண்ட திருமதி நிலாந்தி ஜோஹாம் அவர்களின் அனுசரணையுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 22 வது படைப்பிரிவின் 221 வது பிரிகேட் படையினரால் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலையில் உள்ள ரேவதா சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 27 சிறுவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.

221 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க அவர்கள் இந்த நிகழ்விற்கான வழிகாட்டல்களை வழங்கினார். ஒவ்வொரு சிறுவர்ருக்கும் கல்வி நோக்கங்களுக்காக தேவைப்பட்ட ஒரு பாடசாலை பை, ஒரு ஜோடி பாடசாலை காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.