Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2022 20:34:00 Hours

211 வது பிரிகேட் தலைமையகம் கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கள்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் கீழுள்ள 211 வது பிரிகேட் சிப்பாய்கள் 2022 ஒக்டோபர் 8 ஆம் திகதி மதவாச்சிய மற்றும் ரம்பேவ கிராம சேவை பிரிவுகளில் அமைந்துள்ள கரம்பன்குளம் ஆரம்பப் பாடசாலை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள கபிரிகாகம ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 63 பரிசுப் பொதிகள் மற்றும் 63 உலர் உணவுப் பொதிகள், ருசியான மதிய உணவுப் பொதிகள் ஆகியவற்றை வழங்கினர். இதற்கான அனுசரணையானது கொழும்பு மியூஸியஸ் கல்லூரியின் பழைய பெண்கள் சங்கத்தைச் சேர்ந்த திருமதி ஹர்ஷனி குணசேகர சித்ரசிறி மற்றும் திருமதி றோன் தோமஸ் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

211 வது பிரிகேடின் சிவில் விவகார அலுவல்கள் பிரிவினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நன்கொடை நிகழ்ச்சி அந்தந்தப் பாடசாலைகளில் ஆரம்பமானதுடன், இந்நிகழ்வில் 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நிவாரண உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உதவிகளின் மதிப்பு ரூ.6 லட்சத்தை தாண்டியது.

மியூஸியஸ் கல்லூரி பழைய பெண்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு.பிரசாத் லொக்குபாலசூரிய அவர்கள் இந்த விநியோக நிகழ்வுகளில் கலந்துகொண்டார். 14 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி 2 வது கட்டளை அதிகாரி, 211 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 14 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்கள் இந்த திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.