Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2022 15:08:43 Hours

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரிவின் தளபதி கட்டளை பிரிவுகளுக்கு விஜயம்

மேஜர் ஜெனரல் சானக மேத்தானந்தா அவர்கள் கிழக்குப் முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் புதிய தளபதியாக அண்மையில் கடமை பொறுப்பேற்றதை தொடர்ந்து கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 மற்றும் 22 வது படைப் பிரிவுகளின் கீழ் உள்ள கட்டளைப் பிரிவுகளுக்கு ஒக்டோபர் 16-17 திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டார்.

அவ் விஜயத்தின்போது அவர் அந்தந்த பிரிவுகளின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வழங்கல் மற்றும் நிர்வாக விடயங்களையும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர் படையினருடன் உரையாடினார்.