18th October 2022 17:31:26 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு வெலிகந்தவில் உள்ள கவுடகலை ‘ஆரண்ய சேனாசனய’ என்ற பழங்கால விகாரையில் உள்ள பிக்குகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதி மர கிளை நடுகை நிகழ்வுகளுக்கு படையினர் சனிக்கிழமை (15) தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் வண தேவகல பிரக்ஞசீஹாலங்கார தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேசத்திலுள்ள பிக்குகள், படையினர் மற்றும் பக்தர்களின் பங்குபற்றுதலுடன் விழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் திரு திலின கமகே, 233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே மற்றும் மகாவலி "எச்" வலயத்தின் வதிவிட திட்ட முகாமையாளர் திரு இந்திக ரணவீர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் , பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் மற்றும் கிராம மக்கள் இப் ‘பிங்கம’ நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுகள் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதான சிவில் விவகார அதிகாரி கேணல் ராஜீவ் பெர்னாண்டோ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.