Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2022 17:28:37 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 22 வது தளபதியாக வியாழன் (13) அன்று பொரளையில் உள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அங்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்களை இலங்கை இராணுவ மகளிர் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்த திப்படுகேவரவேற்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு மகா சங்க உறுப்பினர்களின் ‘சேத் பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் புதிய தளபதி புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

அன்றைய நிகழ்ச்சியில் தேநீர் விருந்துபசாரம், படையினருடான கலந்துரையாடல் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் படையணி தலைமையகத்தில் உள்ள அனைத்து பணிநிலை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஆகியன இடம்பெற்றன.

தற்போது, மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன இலங்கை இராணுவத்தின் தலைமைப் கள பொறியாளராகவும் நியமனம் பெற்றுள்ளார். நாடு முழுவதும் செயல்பாட்டு, நிர்வாக மற்றும் பதவி நிலை உட்பட பல சிரேஷ்ட முக்கிய நியமனங்களை அவர் வகித்துள்ளார்.