17th October 2022 14:41:59 Hours
வறிய குடும்பங்களுக்கு வீட்டை நிர்மாணித்து கொடுக்கும் பணியை முன்னெடுத்துள்ள இராணுவத்தினர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் இப்பகுதியில் உள்ள கல்லடி, ஏச்சலன்பற்று பகுதிகளில் உள்ள இரண்டு ஏழை குடும்பங்களுக்கு மேலும் இரண்டு புதிய வீடுகளை Hayley's PLC Ltd தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணித்துள்ளனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22வது படைப் பிரிவின் 222 வது பிரிகேடின் 24 வது விஜயபாகு காலாட்படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளும் 73 வது இராணுவ தினம் மற்றும் இராணுவ நிறைவாண்டை முன்னிட்டு திங்கட்கிழமை (10) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
கிழக்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் 222 வது பிரிகேட் தளபதி கேணல் நிமால் சந்திரசேகர அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன், இராணுவ தொழில்நுட்ப திறன் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்குமான நிதி அனுசரணையானது ஹேலிஸ் பிஎல்சியின் பணிப்பாளர் திருமதி சரமிளா ரகுநாதன் அவர்களினால் வழங்கப்பட்டது.
இத் திட்டமானது 24 வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.கே.டி.ஜே.ரத்னபிரிய அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதாம அதிதியாக கலந்து கொண்ட 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகமவிடமிருந்து பயனாளிகளுக்கு வீட்டின் திறப்புகள் கையழிக்கப்பட்டன.
பயனாளிகள் திருமதி ஜெயானந்தன் தாமரவேல்வி மற்றும் திருமதி கார்த்திக் உஷாந்தனி ஆகியோர் அடங்குவர்.சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இரண்டு புதிய வீடுகளுக்கான சாவியை வழங்குவதற்காக 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகமவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த வீடுகளின் திறப்பு விழா நிகழ்வில் நன்கொடையாளர் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். படையினர் பயனாளிகளுக்கு அவர்களின் கட்டுமான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறன்களுக்கு மேலதிகமாக வீட்டு உபகரணங்களையும் பரிசாக வழங்கினர்.
மேலும் இந் நிகழ்வில் 222 வது பிரிகேட் தளபதி (கண்காணிப்பு), 222 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 22 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உதவிய பலர் கலந்துகொண்டனர்.