17th October 2022 20:55:48 Hours
58 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 582 வது பிரிகேட் படையினர் ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தமது வருடாந்த அன்னதானம் வழங்கும் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக, இலிம்ப ஹொரணை ஸ்வர்ணபலி முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு மகிழ்வான உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடாத்தினர்.
582 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டத்தில் மனநல சிக்கல்களுடன் வாழ்பவர்கள் உட்பட 38 முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
582 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.பி.பி குலதிலக மற்றும் படையினர் விருந்துபசாரத்தினை தொடர்ந்து அந்த முதியோர்களுக்கு இசை நிகழ்வு ஒன்றினையும் ஏற்பாடுசெய்தனர்.