17th October 2022 21:00:04 Hours
இராணுவ வாகனங்களில் பட்டரியைப் பயன்படுத்துதல் மற்றும் டயர்களைப் பராமரித்தல் தொடர்பான பயிற்சித் திட்டம் வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் மேற்பார்வையின் கீழ் 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி முகாமில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமானது.
இத்திட்டத்தின் போது சியெட் பிரைவேட் லிமிடெட் வழங்கிய பயிற்சியானது டயர்களை முறையாக பராமரித்தல், டயர்களை புனரமைத்தல், டயர்களை வகைப்படுத்துதல் மற்றும் டயர்களை பயனுள்ள மற்றும் கவனமாக பயன்படுத்துதல் என்பனவற்றை கொண்டிருந்தது.
மேலும், பிரவுன்ஸ் பிரைவேட் லிமிடெட் சிறந்த நீடித்துழைப்பு மற்றும் செயல்திறனைப் பெறுவதற்காக பட்டரியின் சரியான பராமரிப்பு மற்றும் அதன் அதிகபட்ச பயன்பாடு பற்றிய பயிற்சியை வழங்கியது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பல்வேறு படையணிகளை சேர்ந்த 72 படையினர் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றினர்.