Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2022 21:07:00 Hours

படையினரின் உதவியுடன் நாவட்குழியில் ‘கட்டின பூஜை’

யாழ். நாவட்குழியில் அமைந்துள்ள நாவட்குழி சமிதி சுமன விகாரையில் வருடாந்தம் நடைபெறும் 'கட்டின சீவர பூஜை' 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ மற்றும் படையினரின் பூரண ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வுகள் நாவட்குழி சமிதி சுமண விகாரையின் தலைமை தேரர் வண. ஹங்வெல்ல ரத்னசிறி தேரரின் வழிகாட்டலில் 15ம் 16ம் திகதிகளில் நடைபெற்றது.

52 வது படைப்பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ‘பிரித்’ பாராயணம் மற்றும் கட்டின சீவர பூஜை (புதிய அங்கிகளை சமர்ப்பித்தல்) என்பவற்றில் பங்குபற்றினர்.

22 பௌத்த பிக்குகள் பிரித்பிராயணம் மற்றும் மறுநாள் கட்டின சீவர பூஜையில் கலந்து கொண்டனர்.

52 வது படைப்பிரிவின் தளபதி, 521 மற்றும் 522 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் 52 வது படைப்பிரிவின் கீழ் உள்ள அனைத்து கட்டளை அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.