17th October 2022 21:09:55 Hours
533 வது பிரிகேட் கட்டளையின் கீழ் உள்ள 6 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி படையினர் மிஹிந்தலை போகஹயாய பிரதேசத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 52 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (16) வழங்கினர். இதற்கான அனுசரணையானது பொறியியலாளர் பிரசன்ன சண்டகெலும் அவர்களினால் வழங்கப்பட்டது.
அக்குடும்பங்கள் அனுபவித்து வரும் சிரமங்களை அறிந்த படையினர், நன்கொடையாளரின் உதவியினை நாடினர்.
இந்த நிகழ்வில் 533 வது பிரிகேட் தளபதி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றினர்.